tamilnadu

img

கோவில் இசைக் கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு : நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
தமிழக கோவில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கு ஆறு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க  வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.வடபழனி ஆண்டவர் கோவில், திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் ஆகியவற்றில் தவில், மிருதங்கம் போன்ற வாத்தியங்களை இசைக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு 8 ஆயிரத்து 185 ரூபாய் ஊதியத்தை 10 ஆயிரத்து 100 ரூபாயாக உயர்த்தி கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகஅரசு அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கும் ஊதியஉயர்வு அளிக்க வேண்டும் என மதுரை மீனாட்சி அம்மன்கோவில் இசைக் கலைஞர் கணேசன்  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில்,  ஊதிய உயர்வு கோரிக்கையை மீனாட்சி அம்மன்கோவில் இணை ஆணையர், அறநிலைத்துறை ஆணையருக்கு அனுப்பியும்  நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை வெள்ளியன்று விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழக கோவில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் ஆறு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் சம்பளப்பாக்கியை ஆறு வாரத்திற்குள் வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.ஊதிய உயர்வு தொடர்பாக தமிழக அரசு பலஉத்தரவுகளைப் பிறப்பித்தும் அது ஓதுவார்கள், இசை கலைஞரைச் சென்றடையவில்லைஎன்றார்.

;